எனக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் மேக்ரான்? பிரெஞ்சு இளம்பெண்ணின் சோகமும் கோபமும்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

எரிபொருள் வரி உயர்வை எதிர்த்து பாரீஸில் நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்பதற்காக வட பிரான்சின் ஒரு நகரத்திலிருந்து வந்த ஒரு அழகிய இளம்பெண், இன்று அழகிழந்து, கண்ணை இழந்து, அதனால் எதிர்காலமே கேள்விக்குறியாக, எனக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் மேக்ரான்? என்று கோபமும் சோகமும் ததும்பக் கேட்கிறார்.

வட பிரான்சின் Amiens நகரத்தைச் சேர்ந்த Fiorina Jacob Lignier (20), ஒரு தத்துவவியல் மாணவி.

மஞ்சள் மேலாடை போராட்டங்களுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதற்காக, பாரீஸில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்வதற்காக தனது காதலருடன் வந்திருந்தார் அவர்.

அமைதியாக போய்க்கொண்டிருந்த மஞ்சள் மேலாடை பேரணியில், திடீரென ஒரு கூட்டம் கலவரம் ஏற்படுத்த, பொலிசார் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள்.

Fiorinaவுக்கு அருகில் ஒரு வாயு கிரனேட் குண்டு விழுந்து வெடிக்க, மயங்கி தரையில் விழுந்தார் அவர்.

கண் விழித்தபோது, அவரது மூக்கு உடைந்து, முகத்தில் எலும்புகள் நொறுங்கியதால் முகம் வீங்கிப் போயிருக்க, அவரால், இடது கண்ணால் பார்க்க முடியவில்லை.

பல நாட்கள், பல அறுவை சிகிச்சைகளுக்குப்பின், ஒரு கண் இழந்து அறுவை சிகிச்சைகளால் முகம் மாறிப்போக, அவரது காதலராலேயே அவரை அடையாளம் காணமுடியாத அளவு கோரமாகிப்போனது அவரது முகம்.

இன்னும் சில அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் Fiorina, என் கண் இன்னும் வலிக்கிறது, இனி என்னால் லெக்சர்களுக்கு போக முடியாது, என்னால் படிக்க முடியாது என்கிறார்.

எனது நாட்டை என்னால் அடையாளம் காண முடியவில்லை, எனக்கு என் நாட்டைக் குறித்து பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட்ட நற்குணங்கள் இவை அல்ல என்று கூறும் Fiorina, உலகின் பழமை வாய்ந்த சிறந்த குடியரசு நாடுகளில் ஒன்றில் நாம் வாழ்கிறோம், மற்ற நாடுகளில் இது போல் நடக்கும்போது நாம் கண்டனம் தெரிவித்திருக்கிறோம், இப்போது நமது நாட்டிலேயே அது நடக்கிறது என்பதை நம்ப முடியவில்லை என்கிறார்.

இதற்கிடையில், பிரபல பத்திரிகை ஒன்றில் பிரான்ஸ் நாட்டின் பிரபல கண்மருத்துவர்கள் 35 பேர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பொலிசார் பயன்படுத்தும் ரப்பர் குண்டுகளால் கண்கள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாட்டில் தொற்றுநோய் பரவுவதுபோல அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...