பிரித்தானிய மகாராணியின் பிரான்ஸ் பயணத்தின்போது விதியை மீறி பிரபலம் செய்த அதிர்ச்சி செயல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
195Shares

எலிசபெத் மகாராணி பிரித்தானிய ராஜ குடும்பத்தின் மிக முக்கிய நபர் என்னும் முறையில் அவரிடம் பழகுவோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏராளம் உள்ளன என்றபோதிலும், பிரான்ஸ் பயணத்தின்போது ஒரு மூத்த பிரபலம் விதிகளை மீறி ஒரு மாபெரும் தவறை செய்தார்.

1972ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியும் இளவரசர் பிலிப்பும் பிரான்சுக்கு அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார்கள்.

அப்போது பிரெஞ்சு மேயர் ஒருவர் ஒரு மாபெரும் தவறைச் செய்தார். பொதுவாக இப்படி ஒரு சம்பவம் நேரிட்டால் அது பெரிய பிரச்சினையாகும், ஆனால் அந்த முறை அந்த தவறு மன்னிக்கப்பட்டது.

Les Baux de மாகாணத்தின் மேயர் Raymond Thuillier செய்த அந்த மாபெரும் தவறு... மகாராணியின் தோளில் கை வைத்தது!

ஆனால் நடந்த சம்பவம் என்னவென்றால், 700 அடி உயரமான ஒரு இடத்தின் விளிம்பிற்கு மகாராணி சென்ற போது, அவர் தவறி விழுந்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், மகாராணி ஓரத்திற்கு செல்வதை தடுக்கும் விதமாக மகாராணியின் தோளைப் பிடித்தார் Raymond.

மகாராணியை தொட்டதற்காக பலமுறை பலரையும் பத்திரிகைகள் கடுமையாக வசைபாடியுள்ளன. ஆனால் இந்த சம்பவம் நடந்தபோது Raymondஐ பத்திரிகைகள் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விதிகளின்படி, யாரும் மகாராணியைத் தொடக்கூடாது, அவர் கைகுலுக்குவதற்காக கையை நீட்டினால் மட்டுமே மற்றவர்கள் அவருடன் கை குலுக்கலாம்.

2009ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியாகிய மிச்செல் ஒபாமா, விதிகளை மீறி மகாராணியின் தோள்களைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டது உலகின் கவனத்தை ஈர்த்தது நினைவிருக்கலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்