பிரான்சில் சிறைக்காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தால் பல்வேறு சிறைச்சாலைகள் முடக்கம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Conde-sur-Sarthe சிறைச்சாலையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.

Conde-sur-Sarthe சிறைச்சாலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு அதிகாரிகள் மிக மோசமாக காயமடைந்திருந்தனர். அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 20 சிறைச்சாலைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களது பணியின் நிலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்காக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறைச்சாலை அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறைச்சாலைகளுக்கு முன்பு சக்கரங்களை போட்டு எரித்து அதிகாரிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து Fleury-Merogis சிறைச்சாலை அதிகாரிகளின் சங்க தலைவர் Thibault Capelle கூறுகையில்,

‘சக அதிகாரிகளை பணிக்கு அனுப்ப நாம் விரும்புகிறோம். ஆனால், அவர்கள் கொலை செய்யப்படுவதை நாம் விரும்பவில்லை’ என தெரிவித்துள்ளார். இதுபோல் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளால் தாக்கப்படுவது முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, Michael Chiolo என்ற கைதி சிறைக்காவலர்கள் இருவரை கத்தி ஒன்றினால் கொடூரமாக தாக்கினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே, சிறைச்சாலை அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

AFP

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்