அல்லாஹூ அக்பர் என்று கத்தியபடி சிறைக்காவலர்களை தாக்கிய கைதி: பொலிஸ் சுட்டதில் கர்ப்பிணி மனைவி உயிரிழந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர் இரண்டு சிறைக்காவலர்கள் மீது திடீர்த்தாக்குதல் நடத்திய சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Michaël Chiolo என்பவர், நாஸி சித்திரவதை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு முதியவரைக் கொலை செய்தது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக Normandy சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நேற்று Chioloவின் மனைவி அவரைக் காண வந்திருந்தபோது, திடீரென கத்தி ஒன்றினால் சிறைக்காவலர்கள் இருவரை கொடூரமாக தாக்கினார் Chiolo.

இந்த சம்பவத்தில் இரு காவலர்கள் காயமடைந்தனர், ஒருவர் நிலைமை மிக மோசமடைந்தது. இதற்கிடையில் Chioloவும் அவரது மனைவியும், சிறைக்கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் இடத்திற்கு சென்று மறைந்து கொள்ள, பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பின்னர் இருவரையும் பொலிசார் கைது செய்த நிலையில், Chioloவின் மனைவி காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.

காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது Chiolo அல்லாஹூ அக்பர் என்று கத்தியுள்ளார்.

சிறையில் இருக்கும்போது இஸ்லாமைத் தழுவிய Chiolo, ஏற்கனவே தீவிரவாதத்தை வெளிப்படையாக அறிக்கையிட்டதற்காக, கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Strasbourgஇல் 2018இல் தீவிரவாத தாக்குதல் நடத்திய தனது நண்பரான Cherif Chekatt கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவே இந்த தாக்குதலை நடத்தியதாக Chiolo தெரிவித்துள்ளார்.

இது நிச்சயம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கூறியுள்ள பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் Nicole Belloubet, Chiolo தாக்குதலுக்கு பயன்படுத்திய அந்த கத்தியை அவரது மனைவி மறைத்துக் கொண்டு வந்திருக்கலாம் என்கிறார்.

அந்த கத்தி மெட்டல் டிடெக்டர்களுக்கு சிக்காமல் இருக்கும் வகையில் செராமிக்கால் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில் உயிரிழந்த Chioloவின் மனைவி கர்ப்பமாக இருந்ததாக செய்திகள் கிடைத்துள்ளன.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்