பிரெக்சிட்டால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாது: பிரான்ஸ் ரயில்வே

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் தேவையில்லை என்று பிரான்ஸ் ரயில்வே துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ரயில்வே துறையின் தலைவரான Guillaume Pepy, பிரித்தானியா, ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினாலும்கூட தொடர்ந்து ரயில்களை இயக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில், ஐரோப்பாவில் ரயில் ஓட்டுநர்களாக பணியாற்றுபவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தாமாகவே செல்லாததாகிவிடும் என்னும் ஒரு அச்சம் நிலவி வருகிறது.

ஆனால் அது குறித்து அஞ்ச வேண்டாம் என Pepy பயணிகளுக்கு உறுதியளித்துள்ளார். பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், நிலைமை எப்படி மாறினாலும் ரயில் சேவை தொடரும் என்றார் அவர்.

அடையாளம் மற்றும் சுங்க சோதனை தொடர்பாக பாரீஸுக்கும் லண்டனுக்கும் இடையில் சில விடயங்கள் எவ்வாறு ஒழுங்கு செய்யப்படுகின்றன என்பது குறித்து மட்டும் பார்க்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

அப்படிப்பட்ட சோதனைகளால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டால், ரயிலை சற்று நேரம் கூட நிறுத்தி வைக்கலாமா, அல்லது பயணிகளை அடுத்த ரயிலில் அனுப்பலாமா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்