பிரான்ஸ் சுற்றுலாப்பயணிக்கு மியான்மரில் சிறை! காரணம் இதுதான்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மியான்மரில் நாடாளுமன்றம் அருகே ட்ரோன் ஒன்றைப் பறக்கவிட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Michel Desclaux (27) மியான்மருக்கு சுற்றுலா சென்றபோது அங்கு நாடாளுமன்றக் கட்டிடம் அருகே ட்ரோன் ஒன்றை அருமையாக பறக்க விட்டிருக்கிறார்.

பொலிசார் உட்பட பலரும் அவர் ட்ரோன் விட்ட விதத்தை ரசித்தாலும், பின்னர் Michel பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார், காரணம், மியான்மரில் நாடாளுமன்றக் கட்டிடம் அருகே ட்ரோனை பறக்க விடுவது சட்டப்படி குற்றம்.

நாடாளுமன்றக் கட்டிடம் அருகே ட்ரோனை பறக்க விடுவதற்கு தண்டனை மூன்று மாதங்கள்தான் என்றாலும், நாட்டுக்குள் ட்ரோன் ஒன்றைக் கொண்டுவருவது ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தின்படி கடுமையான குற்றம் என்பதால் அதற்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Michel எதையெல்லாம் படம் பிடித்தார் என்பதை அறிவதற்காக அவரது ட்ரோன் கெமராவை பொலிசார் சோதித்து வரும் அதே நேரத்தில் அவர் என்ன நோக்கத்திற்காக ட்ரோனை இயக்கினார் என்பதையெல்லாம் முடிவு செய்த பிறகே, அவருக்கு என்ன தண்டனை என்பது தெரியவரும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...