விமான விபத்தில் காணாமல் போன விமானியை தேடுவதற்கு கால்பந்து வீரர் செய்த நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டு

Report Print Santhan in பிரான்ஸ்

விமான விபத்தில் உயிரிழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், விமானியின் உடல் மீட்கப்படாததால், அவது உடலை தேடுவதற்கு பிரான்ஸ் கால்பந்து வீரர் தன்னால் இயன்ற உதவியை செய்துள்ளார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் இவரை சமீபத்தில், வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி வாங்கியது. கார்டிப் நகரில் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் திகதி இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.

அதன் பின், பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, ஜனவரி 21-ஆம் திகதி மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது விமானம் சானல் தீவுகளுக்கு அருகே சென்ற போது திடீரென மாயமானது. இதனால் விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் பைலட் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

அவர்களை தேடும் பணி மும்பரமாக நடைபெற்று வந்த போது, எமிலியானோ சலாவின் உடல் கடந்த 7-ஆம் திகதி கடலுக்கடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் விமானியான டேவிட் இபோட்சன் குறித்து எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை, அவரின் உடலைதேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவரின் உடலை மீட்பதற்காக விமானியின் குடும்பத்தினர் நிதி திரட்டி வருகின்றனர். பலரும் அவர்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தகால்பந்து வீரர் கைலன் மப்பே 27000 பவுண்டு (இலங்கை மதிப்பில் 62,16,764.41 லட்சம் ரூபாய்) நிதியுதவி வழங்கியுள்ளார்.

கைலன் மப்பே இதற்கு முன்னரும் கஷ்டப்படும் நபர்கள் பலருக்கும் உதவி செய்து வரும் நிலையில், இப்போது விமானியை தேடுவதற்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என நினைத்ததால், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேரி லிங்கர் விமானியின் உடல் தேடுவதற்கு 1000 பவுண்டு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 3 லட்சம் பவுண்டுகள் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், நேற்று மாலை வரை 7000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டுகள் வரை நிதி வந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers