பிரான்சில் 10 பேரை பலிகொண்ட பயங்கர தீ விபத்து! முதல் முறையாக வெளியான இறந்த பெண்ணின் புகைப்படம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக இறந்த 10 பேரில் ஒருவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Erlanger வீதியின் 16-ஆம் வட்டாரத்தில் இருக்கும் எட்டு மாடி அடுக்கு குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக 10 பேர் பரிதாபமாக பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இறந்தவர்கள் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், 10 பேரில் ஒரு பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க Radia Benaziez தீ விபத்து ஏற்பட்ட போது கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்ததாக கூறப்படுகிறது.

அல்ஜீரியாவைச் சேர்ந்த இவர் கட்டிட வடிவமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் அவரின் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்திற்கு முக்கிய காரணம் பெண் ஒருவர் தான் என்று கூறப்பட்டு பொலிசார் அவரை கைது செய்த நிலையில், முதல் கட்ட விசாரணையில், சம்பவ தினத்தன்று அவர் மது அருந்தியதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி இன்னும் சில பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதைப் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers