பிரான்சில் பயங்கர தீ விபத்தால் உதவிக்கு கதறிய பெண்! உயிரை பணையம் வைத்து காப்பாற்றும் வீரர்களின் வீடியோ

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக 8 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 16-ஆம் வட்டாரத்தில் இருக்கும் எட்டு மாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

முதலில் சாதரணமாக எரிந்து கொண்டிருந்த கட்டிடம் நேரம் செல்ல, செல்ல காட்டுத் தீ போல் அடுத்தடுத்த பிளாக்குகளுக்கு பரவியதால், தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.

தற்போது வரை கிடைத்த தகவலின் படி 8 பேர் பலியாகியிருப்பதாகவும், 36 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 36 பேரில் 6 தீயணைப்பு வீரகளும் காயமடைந்துள்ளனர்.

கட்டிடத்தில் சிக்கியிருந்த மக்களின் 50 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் வேறு யாரேனும் கட்டத்தில் சிக்கியுள்ளனரா என்பதற்காக தீயணைப்பு வீரர்கள், தங்கள் உயிரையும் பணையம் வைத்து, அங்கிருக்கும் கட்டிடங்களுக்குள் சென்று வருகின்றனர்.

அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த தீ விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பெண் ஒருவர் தான் என்று கூறப்படுகிறது. 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் மனவளர்ச்சி குன்றியவர் என்றும் அங்கிருக்கும் ஒரு சில ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும் இந்த சம்பவத்தைக் கண்ட அங்கிருக்கும் தெருவில் வசித்து வரும் Jacqueline Ravier என்பவர் கூறுகையில், அந்த பில்டிங்கில் இருந்து பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், உதவுங்கள் என்று சத்தம் போட்டார், உயிர் பயத்தில் கதறி அழுதார்.

தீ அடுத்து எங்கள் பீல்டிங்கிற்குள் வரப்போகிறது என்று கத்தினர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை காப்பாற்றியிருப்பார்கள் என்று நினைப்பதாக கூறியுள்ளார்.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்