பிரான்சில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து..7 பேர் பலி 28 பேர் காயம்! வெளியான பரபரப்பு தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக 7 பேர் பலியாகியிருப்பதாகவும் 28 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Erlanger வீதியின் 16-ஆம் வட்டாரத்தில் இருக்கும் எட்டு மாடி அடுக்கு குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு பயரங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக ஆம்புலன்சுடன் அங்கு விரைந்த தீயணைப்பு குழுவினர், தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இதுவரை இந்த தீ விபத்து காரணமாக 7 பேர் பலியாகியிருப்பதாகவும், 28 பேர் காயமடைந்திருப்பதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பயங்கர தீ விபத்தின் காரணமாக சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

ஒரு சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள அங்கிருந்த குதித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.

தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் தான் ஈபிள் டவர், Paris Saint-Germain's home மைதானம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளும் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் தான் உள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்