சினிமா பாணியில் மனைவியை கொன்ற முன்னாள் கணவன்: பிரான்ஸில் சம்பவம்

Report Print Kavitha in பிரான்ஸ்

பிரான்ஸில் Cernay-la-ville என்ற பகுதியில் சினிமா பாணியில் மனைவியை முன்னாள் கணவன் சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்மணி Cernay-la-Ville (Yvelines) இல் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் முன்னாள் கணவர் வீட்டுக்குள் ஆயுதத்துடன் நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதைத் தொடர்ந்து தகராறு வன்முறையாக வெடித்துள்ளது.

முன்னாள் கணவர் அப்பெண்ணை சுத்தியல் ஒன்றின் மூலம் தாக்கி, பெண்ணின் தாயாரும், தந்தையும் மிக மோசமாகவும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். மேலும் பெண்ணின் பெற்றோர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்திய நபர் Dampierre-en-Yvelines ஐச் சேர்ந்தவர் எனவும், இவர்களுக்கு 15 மற்றும் 17 வயதுகளில் பிள்ளைகள் உள்ளனர எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக Rambouillet பிராந்திய ஜோந்தாமினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் தாக்குதலை நடத்திய அப்பெண்ணின் முன்னாள் கணவர் தேடப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers