ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்! வெளியான தகவல்

Report Print Kabilan in பிரான்ஸ்

ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள், பாரிசில் ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 126 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இந்நிலையில், அதே பயங்கரவாதிகள் ஸ்பெயினில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே பாரிஸ் வந்ததாகவும், ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டியிருந்ததும் தெரிய வந்துள்ளது.

பொலிசாருக்கு கிடைத்த ஆதாரங்களின் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அவற்றில் தொலைபேசி சேமிப்பு அட்டை ஒன்றும், கமெரா ஒன்றும் அடங்கும்.

அத்துடன் ஒன்றைரை நிமிட காணொளி ஒன்றும் சிக்கியதாகவும், அதில் தான் ஈஃபிள் கோபுரத்தை தகர்க்கும் படியான திட்டங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த ஸ்பெயின் குண்டுவெடிப்பில் பிரெஞ்சு உளத்துறையும் இணைந்து பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்