நெருப்பு கோளமான குடியிருப்பு... ஜன்னல் வழியே குதித்து தப்பிய நபர்: பலர் வெளியேற்றம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸின் Courchevel பகுதியில் உள்ள பிரஞ்சு ஸ்கை ரிசார்ட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து இருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை 4:30 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கட்டிடத்தில் வெளிநாட்டினர் உட்பட 60 பேர்வரை வசித்துள்ளனர். விபத்துக்குரிய காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் நால்வர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜன்னல் வழியே ஒருவர் வெளியே குதித்து தப்பிய காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சம்பவ இடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். 70 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

காலை 8 மணிக்கு தீ அணைக்கப்பட்டதுடன் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers