போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ள வேண்டும்: பிரான்ஸ் முன்னாள் அமைச்சர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கலவரங்களில் ஈடுபடும் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

பிரான்சின் முன்னாள் கல்வி அமைச்சரான Luc Ferry, போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு பிரான்ஸ் பொலிசாருக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

2018 நவம்பர் 17 முதல் பிரான்சில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டங்கள் தொடங்கின.

வாகன ஓட்டிகள் கட்டாயம் தங்களுடன் வைத்திருக்க வேண்டிய மஞ்சள் மேலாடைகளை அணிந்து கொண்டு போராட்டக்காரர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நாடு மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமையை எதிர்கொண்டு வரும் நிலையில் அதை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் Ferry தனது ஆலோசனையை அளித்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்டால், காயங்களும் ஒருவேளை உயிரிழப்பும் ஏற்படலாமே என்று கேட்டதற்கு அவர், துரதிஷ்டசாலியான ஒரு பொலிசாரை குண்டர்கள் அடிப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தினால் போதும் என்கிறார்.

உலகின் நான்காவது பெரிய ராணுவம் நம்முடையது, அதைக் கொண்டு இந்த போராட்டங்களுக்கு ஒரு முடிவு கட்ட இயலும் என்கிறார் Ferry.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers