இரண்டு இடங்களில் இன்று மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பம்...பரிசில் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு

Report Print Kavitha in பிரான்ஸ்

கடந்த நவம்பர் 17 ஆம் திகதி மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இன்று எட்டாவது வாரமாக பரிசில் மஞ்சள் மேலங்கி போராட்டம் நடைபெற்று கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை பரிசில் இரண்டு இடங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் சோம்ப்ஸ்-எலிசே பகுதியிலும், பரிஸ் நகர மண்டபத்துக்கு முன்னாலும் மேற்கொள்ள மஞ்சள் மேலங்கி போராளிகள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் மஞ்சள் மேலங்கி போராட்ட ஒருங்கிணைப்பாளரான Eric Drouet கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டமும், வழக்கம் போன்ற ஆர்ப்பாட்டமும் இடம்பெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த போராட்டின் போது வன்முறை வெடிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதப்படுகின்றது.

காவல்துறையினர் முற்று முழுதான பாதுகாப்பில் ஈடுவார்கள் எனவும் கடந்த சில வாரங்களைப் போல் இல்லாமல், இந்த வாரம் அதிகளவான போர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers