பிரான்ஸ் ஜனாதிபதியை ஹிட்லருடன் ஒப்பிட்ட பத்திரிகை: பின்னர் நடந்த சம்பவம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை ஹிட்லருடன் ஒப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதற்காக கடும் கண்டனத்துக்குள்ளானதால் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாக்கப்பட்டது.

ஒரு பக்கம் மஞ்சள் மேலாடை போராட்டங்களால் கடும் பிரச்சினைகளை சந்தித்து வரும் பிரான்ஸ் ஜனாதிபதியின் கோபத்தை இன்னும் அதிகரிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிகையான Le Monde, அவரை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு அட்டைப்படம் ஒன்றை வெளியிட்டு அவரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

Le Monde ஒரு பக்கம் இமானுவல் மேக்ரானின் படத்தையும் மறுபக்கம் அதே போல் நிற்கும் ஹிட்லரின் படத்தையும் ஒப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டுள்ளதைக் கண்ட அந்த பத்திரிகையின் வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

பிரான்ஸ் நாடாளுமன்ற கீழவையின் தலைவரும் மேக்ரானுக்கு நெருக்கமான அரசியல்வாதியுமான Richard Ferrand, இந்த படங்களையும் ஒப்பீடுகளையும் பார்க்கும்போது அவை தற்செயலாக வெளியிடப்பட்டவைபோல் தோன்றவில்லை என்றார்.

எழுந்த கடும் கண்டனங்கள், எதிர்ப்புகளையடுத்து Le Monde பத்திரிகையின் ஆசிரியரான Luc Bronner, நேற்று மன்னிப்புக் கோரினார்.

சனிக்கிழமை வெளியான Le Monde பத்திரிகையின் அட்டைப்படம் நமது வாசகர்கள் பலரிடமிருந்து கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.

அந்த படத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றவர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.


You May Like This..

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்