வெடிகுண்டுகளுடன் பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி கைது: பாரீஸ் ரயில் நிலையத்தில் பரபரப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கூட்ட நெரிசல் மிக்க பாரீஸ் ரயில் நிலையத்தில், வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரிந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸின் Gare de Lyon ரயில் நிலையத்தில், பொலிசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 29 வயது நபர் ஒருவர் வெடிகுண்டுகளுடன் சிக்கினார்.

அவரை கைது செய்யும்போது பலத்த எதிர்ப்பு தெரிவித்த அந்த நபரை பல பொலிசார் சேர்ந்து போராடி கைது செய்தனர்.

96 மணி நேரம் அவரிடம் பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர் மப்டியில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி என்பது தெரிய வந்தது.

ராணுவ பிரிவு ஒன்றில் வெடி குண்டு நிபுணராக பணியாற்றிய அவர் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...