பல மில்லியன்களை தாண்டிய பிரான்சின் மக்கள்தொகை! வெளியான புள்ளி விபரம்

Report Print Kabilan in பிரான்ஸ்

கடந்த 2016ஆம் ஆண்டு ஆரம்பித்த பிரான்சின் மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய நிறுவனமான Insee இந்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் பிரான்சின் மக்கள்தொகை 66 மில்லியன்களை கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டிற்கும், 2016ஆம் ஆண்டிற்கும் இடையில் பிரான்சின் முக்கிய பெரு நகர பகுதிகளில் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நோந்த், போர்தோ, மொன்பெலியே, லியோன் போன்ற பெரு நகரங்களில் 2016ஆம் ஆண்டு முறையே 3 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இதே கால இடைவெளியில் பாரிஸ் மக்கள் 11,900 பேர் வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால் 2006-2011 காலப் பகுதிகளில் பாரிஸ் குடிமக்கள் அல்லாதோர் சுமார் 13,700 பேர் பாரிசிற்குள் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers