பிரான்ஸ் பனிப்பாறைச்சரிவில் சிக்கிய பிரித்தானிய சிறுவன்: நிகழ்ந்த அற்புதம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் பனிப்பாறைச் சரிவில் சிக்கிய ஒரு பிரித்தானிய சிறுவனை மோப்பநாய் ஒன்று மிகச்சரியாக கண்டறிய மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் பனியைத் தோண்டி அவனை மீட்டார்.

15 நிமிடங்களுக்கு பிறகு அவன் மீட்கப்பட்டாலும், அவன் உயிருடன் இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் பனிக்குள் புதைந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான கருவிகள் எதுவும் இல்லாமல், பனிக்குள் புதைந்த ஒருவரை மீட்பது கடினம், அதுவும் உயிருடன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.

அப்படிப்பட்ட நிலையில் Raphael Chovin என்பவரும் அவரது மோப்ப நாயான Getroவும் அந்த சிறுவனை உயிருடன் மீட்டுள்ளது பெரிய அற்புதமாகவே கருதப்படுகிறது. பிரித்தானியாவில் வாழும் அந்த பிரான்ஸ் சிறுவன் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

பிரான்சிலுள்ள Champagny-en-Vanoise பகுதியில் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வந்த இடத்தில் அந்த சிறுவன் பனிப்பாறைச் சரிவில் சிக்கினான்.

அந்த சிறுவன் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவுடன் பனிச்சறுக்குக்காக சென்றபோது அவர்கள் 500 மீற்றர் அகலமும் 800 மீற்றர் நீளமும் கொண்ட பனிப்பாறைச் சரிவைத் தூண்டினர்.

அந்த பனிப்பாறைச் சரிவில் 400 மீற்றர்களுக்கு இழுத்துச் செல்லப்பட்ட அந்த சிறுவன் பனியில் புதைந்தான்.

பனிக்கடியில் சிறிது காற்று நிரம்பிய ஒரு இடத்திற்குள் அவன் சிக்கிக் கொண்டதால் அந்த சிறுவன் உயிருடனும் சுய நினைவுடனும் இருந்திருக்கிறான்.

என்றாலும் பனிக்குள் புதைந்து இவ்வளவு நேரத்திற்கு பிறகு உயிருடன் அவன் மீட்கப்பட்டது ஒரு அற்புதமாகவே கருதப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers