பிரான்ஸ் தலைநகர் பாரிசை விட்டு தொடர்ந்து வெளியேறும் மக்கள்! கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் எத்தனை பேர் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிசை விட்டு மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவது புதிய கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரபல INSEE நிறுவனம் இந்த புதிய கருத்துக்கணிப்பை எடுத்துள்ளது. அதில் ஜனவரி 1, 2016 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிசில், 2,190,327 மக்கள் வசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 0.5 வீத மக்களை பரிஸ் நகரம் இழந்துள்ளதாகவும், மக்கள் தொடர்ச்சியாக பரிசை விட்டு வெளியேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 1, 2011-ஆம் ஆண்டில் பரிசில் 2,249,975 மக்கள் வசித்துள்ளனர். 2011-இல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையான ஐந்து வருடங்களில் 0.5 வீத மக்கள் தொகையை பரிஸ் இழந்துள்ளது.

வருடத்துக்கு 12,000 மக்கள் படி பரிசை விட்டு வெளியேறு இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பரிஸ் தனது மக்கள் தொகையை இழந்துவரும் அதேவேளை, இல்-து-பிரான்சுக்குள் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதே குறிப்பிட்ட ஐந்து வருட இடைவெளியில் 264,000 மக்கள் இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் அதிகரித்துள்ளதாகவும் INSEE தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers