பனிச்சரிவில் சிக்கிய சிறுவன்.. போராடி காப்பாற்றிய மீட்புப்படை! திக் திக் நிமிடங்கள்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Savoie மாவட்டத்தில் பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட 12 வயது சிறுவன், துரிதமான செயல்பாட்டினால் மீட்கப்பட்டுள்ளான்.

Savoie-யின் La Plagne நகரின் பனிச்சறுக்குத் தடத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் பனிச்சறுக்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் உண்டான பனிக்குவியலில் சிக்கிக் கொண்டான்.

திடீர் பனிச்சரிவினால் சுமார் 400 மீற்றர்கள் தூரம் குறித்த சிறுவன் தூக்கியெறியப்பட்டுப் பனியால் மூடப்பட்டான். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த ஜோந்தார்ம் படையினர் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.

குறித்த சிறுவன் 15 நிமிடங்கள் பனிச்சரிவில் மூழ்கிக்கிடந்த நிலையில் மீட்கப்பட்டான். சிறுவனுக்கு உயிர் ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், விபத்தினால் கால்கள் இரண்டும் முறிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக நடந்த விசாரணையில் பனிச்சரிவு ஆபத்து ஏற்படும் என்பதால், பனிச்சறுக்கலுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் குறித்த சிறுவன் பனிச்சறுக்கலில் ஈடுபட்டதாலேயே இந்த விபரீதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers