பிரான்ஸ் மக்களின் சேமிப்பு கணக்கில் 440 மில்லியன் யூரோக்கள்! இரண்டு மடங்கு அதிகரித்து சாதனை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் மக்களின் சேமிப்பு கணக்குகளில் 440 மில்லியன் யூரோக்கள் முடங்கிக்கிடப்பதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது, 50 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தரவுகளின் படி பிரான்ஸ் மக்களின் நடப்பு ஆண்டில் 440 பில்லியன் யூரோக்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சேமிப்பு, ஓவ்யூதியம் போன்ற காரணங்களால் பணம் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு ஒன்றுக்கு 14,000 யூரோக்கள் எனும் கணக்கில் இது இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 2008 ஆம் ஆண்டில் இருந்து நடப்புக் கணக்குகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பல்வேறு காரணங்களை காட்டி இந்த பணம் முடக்கப்பட்டிருக்கின்ற போதும், கடந்த ஐந்து வருடங்களில் மக்களிடையே சேமிப்பு பழக்கம் வெறும் 4 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers