பிரான்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகின

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் துப்பாக்கிக் சூடு நடத்தி நான்கு பேரின் உயிரிழப்புக்கும் 12 பேர் காயமடைவதற்கும் காரணமாக இருந்த நபர், பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாகக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

Strasbourgஇல் கிறிஸ்துமஸ் சந்தையில் Cherif Chekatt என்னும் நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றான்.

வியாழக்கிழமை இரவு அதே பகுதியில் மீண்டும் அவன் நடமாடுவதைக் கண்ட பொலிசார், அவனை தடுத்து நிறுத்த முற்பட்டபோது, பொலிசாரை நோக்கி அவன் துப்பாக்கியால் சுட்டான்.

வீடியோவை காண

பொலிசார் திருப்பிச் சுட்டதில் அதே இடத்தில் அவன் உயிரிழந்தான். அவன் இறந்து கிடக்கும் வீடியோவும் புகைப்படங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் Strasbourg கிறிஸ்துமஸ் சந்தைப்பகுதிக்கு சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers