பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஐ.எஸ் அமைப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சின் Strasbourg பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Strasbourg பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள் பயங்கரவாதி Chérif Chekatt சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Neudorf பகுதியில் காவற்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாதாக தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து Neudorf பகுதியில் கடுமையான தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்த பொலிசார் இறுதியாகப் பங்கரவாதியை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அங்க அடையாளங்களையும், கையில் காயப்பட்டிருந்ததையும் அவனது படத்தினையும் பொலிசார் வெளியிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் குறித்த நபர் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்ததைக் கண்ட, ஒரு பெண்மணி பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாகக் களத்தில் இறங்கிய சிறப்பு பொலிசார் மேற்கொண்ட தாக்குதலில் பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் Strasbourg பகுதியில் தாக்குதல் நடாத்திய Chériff Chekatt தங்களது அமைப்பைச் சார்ந்தவன் எனப் பிரகடனப்படுத்தி உள்ளது. இவர்களது பிரச்சாரப் பிரிவான Amaq சற்று முன்னதாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மட்டுமின்றி Strasbourg தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பானது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers