மஞ்சள் மேலாடை போராட்டங்களை திசை திருப்ப மேக்ரான் போட்ட நாடகம்: எதிர்ப்பாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களின் போராட்டங்களை திசை திருப்ப பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் போட்ட நாடகமே செவ்வாயன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு என மேக்ரான் எதிர்ப்பாளர்கள் அவர்மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

செவ்வாயன்று Cherif Chekatt (29) என்னும் நபர் Strasbourg நகரில் திடீரென துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் இரண்டு பேர் உயிரிழந்ததோடு 13 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய Cherif Chekatt டாக்சி ஒன்றை திருடி அதில் ஏறித் தப்பி விட்டான்.

இந்நிலையில் மேக்ரான் எதிர்ப்பாளர்கள், மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை நடத்த இருந்த போராட்டங்களை தடுப்பதற்காக திட்டமிட்டு தீவிரவாதத் தாக்குதல் நாடகம் ஒன்றை அரசே நிகழ்த்தியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். சமூக ஊடகங்கள் அவர்களது குற்றச்சாட்டுகளால் நிறைந்துள்ளன.

வீடியோவைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...!

ஒருவர், அடுத்த வாரம் ஒரு மஞ்சள் மேலாடை அணிந்த நபரைக்கூட பார்க்க முடியாது, நன்றாக செய்திருக்கிறீர்கள் மேக்ரான் என்று குறிப்பிட இன்னொருவரோ, தற்செயலாக நடந்ததா அல்லது பெரிது படுத்தப்பட்டதா? என்று கேட்டிருக்கிறார்.

இன்னொருவர், மக்கள் தெருக்களில் இறங்கிப் போரடக்கூடாது என்பதற்காக பயத்தை உருவாகுவதற்காகவே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று ட்வீட்டியிருந்தார்.

மற்றொருவர், நிச்சயமாக இது அரசின் வேலைதான், இதற்குமுன் நீங்கள் கவனித்துப் பார்த்தால் எப்போதெல்லாம் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடந்தனவோ அப்போதெல்லாம் தீவிரவாதத் தாக்குதல்களும் நடந்திருப்பதைக் காணலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்னொருவரோ, தீவிரவாதத் தாக்குதல் நிகழ்த்த விரும்பும் ஒரு நபர், இரவு 8 மணி வரை காத்திருந்து, மூன்றே மூன்று பேர் தெருக்களில் நடமாடும்வரை பொறுத்திருந்து பின்னரா தாக்குதல் நிகழ்த்துவார்?

Champs Elyseesக்குள் நுழைந்து, தன்னையே வெடித்துச் சிதறச் செய்திருக்க மாட்டாரா, இதெல்லாம் இமானுவல் மேக்ரான் திட்டமிட்டு செய்யும் வேலை என்கிறார்.

இந்த விமர்சனங்களால் ஆத்திரமடைந்துள்ள அமைச்சரொருவரின் மாகாணச் செயலர், ஒரு தாக்குதல் நடத்தும் நபர், மூன்று பேரை கொன்றிருக்கிறார், பலர் மோசமாக காயமடைந்துள்ளார்கள். இந்நிலையில் மக்களால் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்று எரிச்சலுடன் கூறியிருக்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers