உங்கள் கோபம் நியாயமானது, என் பக்கமும் தவறு இருக்கிறது: நாட்டு மக்கள்முன் இமானுவல் மேக்ரான் உரை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், போராட்டக்காரர்களின் கோபத்தில் நியாயம் இருப்பதாகவும், தன் பக்கமும் கொஞ்சம் தவறு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் வன்முறையை அடுத்து தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றிய இமானுவல் மேக்ரான், குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தப்படுதல் மற்றும் வரிச்சலுகைகள் குறித்து பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் பல பிரச்சினைகளுக்கெதிராக கடந்த நான்கு வாரங்களாக பிரான்சில் போராட்டங்களும் வன்முறையும் தலை விரித்தாடின.

இந்நிலையில் தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், வன்முறையைக் கடிந்து கொண்டார் என்றாலும், எதிர்ப்பாளர்களின் கோபம் ஆழமானது மற்றும் பல வகைகளில் நியாயமானது என்றார்.

அடுத்த ஆண்டிலிருந்து குறைந்தபட்ச ஊதியம் மாதம் ஒன்றிற்கு 100 யூரோக்களாக உயர்த்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

குறைந்த வருவாய் ஓய்வூதியதாரர்களுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்படுவதாக இருந்த திட்டம் ரத்து செய்யப்படும், ஓவர்டைம் பார்ப்பவர்களுக்கு அந்த ஊதியத்திற்கு வரி கிடையாது, எஜமானர்கள் ஆண்டு தோறும் பணியாளர்களுக்கு வழங்கும் போனஸிற்கு வரி விதிக்கக்கூடாது என வலியுறுத்தப்படுவர் என்பது போன்ற பல சலுகைகளை அவர் அறிவித்தார்.

என்றாலும் பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரியை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று கூறிவிட்ட மேக்ரான், இது நம்மை வலிமையற்றவர்களாக்கும், நாம் புது வேலை வாய்ப்புகளைத்தான் உருவாக்கவேண்டும் என்றார்.

அத்துடன் குறைந்தபட்ச வருமானம் 7 சதவிகிதம் அதிகரிக்கப்படும், இந்த அதிகரிப்பால் ஏற்படும் நிதிச்சுமையை அரசே ஏற்றுக்கொள்ளுமேயொழிய அது பணி வழங்குவோர் தோளில் சுமத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகளால் அரசுக்கு 8 முதல் 10 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers