பிரான்ஸ் போராட்டம்: காயமடைந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தீவிர சிகிச்சை

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பிரான்ஸில் அரசுக்கு எதிராக நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த ஏழு பொலிஸ் அதிகாரிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரான்சில் வாகன எரிபொருள்களின் விலை அதிகரித்து வருவதற்கும், அந் தப் பொருள்களுக்கான வரியை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

எதிர்ப்பின் அடையாளமாக ஒளி ரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், மஞ்சள் அங்கி போராட்டம் என்றழைக்கப்படுகிறது.

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், மூன்றாவது வார மாக கடந்த 1 மற்றும் 2-ஆம் திகதிகளில் மிகவும் தீவிரமடைந்தது.

இந்நிலையில் நேற்றும் நடந்த போராட்டத்தில் மொத்தம் 71 பேர் காயமடைந்ததாகவும், அதில் 7 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை தேறி வர ஓய்வு காலம் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.

மேலும் நாடு முழுவதும் 1385 பேர் கைது செய்யப்பட்டு நிலையில் இது சாதனை என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers