பிரான்ஸ் சுற்றுலாபயணிகளுக்கு ஆபத்து: எச்சரிக்கை விடுத்த பல நாடுகள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் எக்காரணம் கொண்டும் தலையிட வேண்டாம் என பிரான்ஸ் வந்திருக்கும் தங்கள் மக்களுக்கு பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சனிக்கிழமை போராட்ஙகள் நடக்கும் இடங்களிற்கு அருகிலோ, அல்லது தலைநகர் பாரிசின் முக்கிய இடங்களிற்கோ செல்லவேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் பல தூதரகங்கள் எச்சரித்துள்ளன.

அத்தியாவசியக் காரணஙகள் எதுவுமின்றிப் பாரிசுக்குள் செல்லவேண்டாம் என்றும், வாகனங்களில் செல்வோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் இந்த எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதைவிட சனிக்கிழமை பிரான்சிற்குள்ளோ அல்லது பாரிஸ் நகரத்திற்குள்ளோ வரத் திட்டமிட்டிருக்கும் தங்கள் மக்களைப் பயணங்களைத் தள்ளி வைக்குமாறு தெரிவிக்கும் அளவிற்கு, மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்குப் பிரான்சைத் தவிர மற்றைய பல நாடுகள் அஞ்சி உள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers