பிரான்சில் வீடற்றவர்கள்..அகதிகள் குளிப்பதற்கு இலவச நடமாடும் குளியலறை: பாராட்டும் இணையவாசிகள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் வீடற்றவர்கள் மற்றும் அகதிகள் குளிப்பதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடமாடும் குளியலறை வசதியை ஏற்பாடு செய்துள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.

பிரான்சின் Toulouse மாகாணத்தில் இந்த ஏற்பாடு செயல்படுத்தப்படவுள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கிவரும் Le Camion Douche எனும் தொண்டு நிறுவனம் இந்த வசதியினை வழங்கி வருகிறது.

வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் இந்த நடமாடும் வாகனத்தை Toulouse நகரின் வெவ்வேறு பகுதிகளில் பார்க்க முடியும்.

வாகனத்துக்குள் வெந்நீர் வசதியுடன் கூடிய குளியலறை அமைக்கப்பட்டுள்ளது.

இலவசமாகவே இதை பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் Place du Salin பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு வாகனம் தயாராக நிற்கும். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு நிற்பார்கள்.

இந்த வாகனத்தில் துணி துவைப்பதற்கும் வசதிகள் உண்டு.

இந்த செயற்பாடுக்காக குறித்த அமைப்பினர் தங்களது இணையத்தள மூலமாக நன்கொடைகளையும் பெற்று வருகின்றனர். இதற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...