ஏலியன் போல மாறிய 19 வயது இளம்பெண்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

ஹேர்டை ஒவ்வாமை காரணமாக தலை இரண்டு மடங்கு பெரிதாகியிருக்கும் இளம்பெண்ணின் புகைப்படத்தை பார்த்து இணையதளவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தை சேர்ந்த 19 வயதான எஸ்டெல் என்ற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அச்சுறுத்தும் வகையில் உள்ள புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

எஸ்டெல், கடை ஒன்றில் தலைமுடிக்கு பயன்படுத்தும் ஹேர்டை வாங்கி, பாட்டிலில் இடம்பெற்றிருந்த அறிவுறுத்தலின்படியே பயன்படுத்தியுள்ளார்.

ஆனால் அதில் இடம்பெற்றிருந்த 48 நிமிடங்கள் காத்திராமல் 30 நிமிடங்களில் பயன்படுத்தியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருடைய உச்சந்தலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் உறங்கிவிட்டு அதிகாலை எழுந்தபொழுது, சாதாரணமான அளவை தாண்டி 63செமீ அகலத்திற்கு அவருடைய தலை பெரிதாக இருந்துள்ளது.

மேலும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து பயந்துபோன எஸ்டெல்லா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதாகவும், ஆனால் தலை பெரிதாக மாறியபோது ஏற்பட்ட தழும்புகள் இன்னும் சரியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இணையதளங்களில் பரவும் இதுபோன்ற ஹேர்டைகளை யாரும் வாங்கி பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers