பிரான்ஸ் வங்கியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்: பின்னர் நடந்த எதிர்பாராத சம்பவம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் வங்கி ஒன்றில் நுழைந்த பெண் ஒருவர் தன்னிடம் வெடிகுண்டு ஒன்று இருப்பதாகவும் அதை வெடிக்கச் செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Alès பகுதியிலுள்ள Credit Lyonnais வங்கியில் நுழைந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நான் வங்கியை தகர்க்கப்போகிறேன் என்று சத்தமிட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்களும் பொது மக்களும் வங்கியிலிருந்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் வங்கியை உள் பக்கமாக பூட்டிக் கொண்ட அந்த பெண், தான் வங்கியை தகர்க்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த பொலிசார், வங்கியைச் சுறிலும் பாதுகாப்பு அரண் ஒன்றை ஏற்படுத்தியதோடு அக்கம்பக்கத்திலிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, மதியம் 2 மணியளவில் அந்த பெண் தன் கைகளை உயர்த்தியபடி வங்கியிலிருந்து வெளியே வந்து பொலிசாரிடம் சரணடைந்தார்.

அவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களில் ஒருவர் என்று மட்டும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

உடனடியாக அந்த பெண், பொலிசாரால் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். வங்கியினுள் வெடிகுண்டு ஏதாகிலும் வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக பொலிசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்தனர்.

வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் தயாராக வங்கியின் வெளியே நிறுத்தப்பட்டனர்.

ஆரம்ப கட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் செயலாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers