உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பிரான்ஸ் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

டிசம்பர் மாதம் ஒன்றாம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி குடிமக்கள் ஆணுறை வாங்கியதற்கான தொகையை திருப்பிக் கொடுக்க இருப்பதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், ஒரு டாக்டரால் பரிந்துரைக்கப்பட்டு வாங்கப்படும் ஆணுறைக்கான தொகையை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளதாக பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சரான Agnes Buzyn தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 10ஆம் திகதியிலிருந்து பிரான்சின் சமூக பாதுகாப்பு அமைப்பு, ஒரு டாக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, பார்மஸியிலிருந்து வாங்கப்பட்ட ஆணுறை பெட்டிகளுக்கான தொகையை திருப்பிக் கொடுக்க உள்ளது, வேறு விதத்தில் கூறினால், ஆணுறைகள் இனி இலவசம்.

பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சரான Agnes Buzyn, இந்த நடவடிக்கையை, இது ஹெச்.ஐ.வியை தடுக்கும் மற்றும் பிரான்ஸ் மக்களைக் காக்கும் ஒரு புதிய நடவடிக்கை என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

சமீக காலமாக பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் 6000 பேர் ஹெச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது என்று கூறியுள்ள Agnes Buzyn, குறிப்பாக இளைஞர்களில், 25 வயதுக்கு குறைந்தவர்களில், 800 முதல் 1000 பேர் வரை தங்கள் முதல் பாலுறவு அனுபவத்தின்போது ஆணுறை அணிந்தாலும், பின்னர் ஆணுறை அணிவதில்லை என்றார்.

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் மாதம் ஒன்றாம் திகதி அநுசரிக்கப்படுவதையொட்டி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த நடவடிக்கை பால்வினை நோய்களுக்கெதிரான போராட்டத்தை வலிமைப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆணுறைகளுக்கு மட்டுமே பணம் திருப்பிஅளிக்கப்படும் என்பதும் அது எந்த நிறுவனம் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...