ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர் கொடுத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் Grenoble பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சாப்பிட வந்த ஒரு நபர், ஹோட்டலில் மீதி இருக்கும் உணவுப்பொருட்கள் அனைத்திற்கும் பணம் செலுத்தினார்.

தனக்குப்பின் வரும் அனைவரும் இலவசமாக சாப்பிடுவதற்காக அவர் இந்த நற்செயலை செய்துள்ளார்.

சென்ற வாரத்தில் ஒருநாள் பிரான்சின் Grenoble பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்த ஒருவர், ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கு இந்த இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.

அந்த ஹோட்டலுக்கு அவ்வப்போது வருகை தரும் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அவர், தனது கிரெடிட் கார்டு மூலம் 238 யூரோக்களை செலுத்தினார்.

இந்த தொகை மூலம் அந்த ஹோட்டலில் இருக்கும் பீட்ஸா, கேக், சாண்ட்விச் உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கி விடலாம்.

அந்த ஹோட்டலின் மேனேஜரிடம் அவர், ஹோட்டலுக்கு வரும் அனைவரும் இலவசமாக சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

பணம் செலுத்திய அவர், சுமார் ஐந்து நிமிடங்கள் அங்கிருந்துவிட்டு பின்னர், எதுவும் சாப்பிடாமலேயே கிளம்பிச் சென்று விட்டார்.

அன்று அவர் சென்றபின் 20 வாடிக்கையாளர்கள் இலவசமாக சாப்பிட்டதாக அந்த ஹோட்டலின் மேனேஜர் தெரிவித்தார்.

அவர் பணம் செலுத்தும்போது அங்கிருந்த ஒரு வாடிக்கையாளர், அவர் ஒரு சாதாரண நபர், பெரிய வசதியானவர் ஒன்றுமல்ல, அந்த தொகை நிச்சயம் அவருக்கு பெரிய விடயமாக இருந்திருக்கும் என்றார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்