இம்மானுவல் மேக்ரான் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைகிறதா? வெளியான தகவல்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் கடந்த சில வாரங்களாக நடக்கும் மக்கள் போராட்டங்கள், எரிபொருட்களுக்கான வரி போன்றவற்றால் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ifop எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி, ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் மீதான மக்களின் நம்பிக்கை கடந்த இரண்டு வாரங்களில், ஒரேயடியாக 4 புள்ளிகள் வீழ்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரனம், கடந்த சில வாரங்களாக பிரான்சில் நடக்கும் மக்கள் போராட்டங்கள், எரிபொருட்களுக்கான வரி, மக்களின் வாழ்வாதாரத்திற்கான கேள்விக்குறி ஆகியவை தான் என்று கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் இம்மானுவல் மேக்ரான் மீது 29 சதவித மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், தற்போதைய கருத்துக் கணிப்பின்படி 25 சதவித மக்கள் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது மேக்ரான் மீதான மக்களின் நம்பிக்கை 4 சதவிதம் குறைந்துள்ளது.

மேலும், பிரதமர் எதுவார் பிலிப்பின் மீதான நம்பிக்கை 41 சதவிதத்தில் இருந்து 34 சதவிதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்