பிரான்சில் நவம்பர் மாதம் வரும் மாற்றங்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் சாலை மறியல் முதல் ஆகாய விமானங்களில் செய்யப்படும் கட்டண மாற்றங்கள் வரை நவம்பர் மாதத்தில் கொண்டு வரப்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி.

சாலை மறியல்

வாகன எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டித்து வாகன ஓட்டிகள் நவம்பரில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.

நவம்பர் மாதம் 17ஆம் திகதி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார்கள். இதுபோக 7ஆம் திகதி சாலை மறியலில் ஈடுபட இருப்பதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது. பயணம் செய்வோர் கவனித்து தங்கள் பயணங்களை திட்டமிடுவது நல்லது.

இரண்டு நாட்கள் பொது விடுமுறை

நவம்பரில் பிரான்சில் இரண்டு நாட்கள் பொது விடுமுறை. நவம்பர் 1ஆம் திகதி அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை.

ஆனால் இரண்டாவது பொது விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது, அது நவம்பர் 11ஆம் திகதி. அன்று 1918 Armistice நினைவு நாள்.

AAH உதவிக்கட்டணத்தில் மாற்றம்

AAH உதவிக்கட்டணம் பெறும் மாற்றுத்திறனாளிகள் பெறும் தொகை உயர இருக்கிறது.

தற்போதைய மாற்றுத்திறனாளிகளின் AAH உதவிக்கட்டணம் அதிகபட்சம் 819 யூரோக்கள், நவம்பரிலிருந்து அது 860 யூரோக்களாக உயர இருக்கிறது.

எரிவாயு விலையில் மாற்றம்

தங்கள் வீடுகளை வெப்பமாக்கவும் சமைக்கவும் எரிவாயு பயன்படுத்துவோருக்கு ஒரு கெட்ட செய்தி, எரிவாயு நிறுவனமான Engie எரிவாயு விலையை அக்டோபர் மாதக் கட்டணத்திலிருந்து சராசரியாக 5.79 சதவிகிதம் உயர்த்த இருக்கிறது.

சமைக்க மட்டும் எரிவாயுவை பயன்படுத்துவோருக்கு கட்டணம் 1.9 சதவிகிதமும், சமையலுக்கும் தண்ணீர் சூடாக்கவும் எரிவாயுவை பயன்படுத்துவோருக்கு 3.6 சதவிகிதமும் வீடுகளை வெப்பமாக்க மட்டும் பயன்படுத்துவோருக்கு 6 சதவிகிதமும் அதிகரிக்க உள்ளது.

வீட்டு உரிமையாளர்களுக்கு டென்ஷன்

பிரான்சில் வீட்டு உரிமையாளர்கள் நவம்பர் முதல் மார்ச் வரை வீட்டு வாடகை கொடுக்காவிட்டால்கூட அவர்களை காலி செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என்னும் ஒரு வழக்கம் உள்ளது.

குளிர்காலத்தில் மக்கள் குளிரில் வீடின்றி தெருக்களில் அவதிப்படக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில் செயல்படுத்தப்படும் இந்த மனிதாபிமான திட்டம் நவம்பர் முதல் அமுலுக்கு வருகிறது.

லக்கேஜுக்கு கட்டணம்

நவம்பர் முதல் Ryanair நிறுவன விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் வழக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள 40cmx20cmx25cm அளவுடைய சிறிய பை தவிர்த்து ஒரு 10 கிலோ எடையுள்ள பையையும் கொண்டுபோக விரும்பினால், முன்பதிவு செய்யும்போதே 8 யூரோக்கள் செலுத்த வேண்டும், பின்னர் ஆன்லைனில் கட்டணம் செலுத்தினால் 10 யூரோக்கள் கட்டணம்.

முன்கூட்டியே கட்டணம் செலுத்தாவிட்டால், விமான நிலையத்தில் வெளியே செல்லும்போது லக்கேஜ் பெறும்போது 29 யூரோக்களோ அல்லது போர்டிங் கேட்டில் என்றால் 25 யூரோக்களோ செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers