பிரான்சில் சிறைச்சாலை மேற்பார்வையாளர் மீது கொடூர தாக்குதல்

Report Print Kavitha in பிரான்ஸ்

பிரான்சில் Villefranche-sur-Saone (Rhone) சிறைச்சாலையில் கைதி ஒருவர் அங்கிருந்த மேற்பார்வையாளர் ஒருவரை மோசமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17:30 மணி அளவில் உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திடீரென சிறை அறைக்குள் இருந்து வெளியேறிய கைதி உடைந்த கண்ணாடித்துண்டு ஒன்றில் நெகிழி ஒன்றை சுற்றிக்கொண்டு வைத்திருந்து மேற்பார்வையாளர் மீது சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதன்போது அதிகாரியின் தலை முதுகுப்பகுதி மற்றும் தொண்டையில் கண்ணாடி மிக ஆழமாக வெட்டியுள்ளது.

பின்னர் சக அதிகாரிகள் கைதி மீது பாய்ந்து அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் நடத்திய கைதிக்கு 36 வயது எனவும், இதுவரை 20 தாக்குதல்களை இவர் நடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைதி, மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...