விருந்தினராக வந்த பிரான்ஸ் இளம்பெண்ணிடம் எல்லை மீறிய வர்த்தகர் தலைமறைவு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தனது மகள் பிரான்சுக்கு சென்றபோது அவரை ஒரு விருந்தினராக கவனித்துக் கொண்ட ஒரு மாணவி, ஒரு கல்வித் திட்டத்தின்கீழ் தனது வீட்டுக்கு வந்தபோது அவளிடம் தவறாக நடந்துகொண்ட ஒரு வர்த்தகர் தலைமறைவானார்.

கல்வித்திட்டம் ஒன்றின்கீழ், பிரான்ஸ் செல்லும் இந்திய மாணவிகள், பிரான்ஸ் மாணவிகளின் வீடுகளிலும், அந்த பிரான்ஸ் மாணவிகள் இந்தியா வரும்போது, தாங்கள் விருந்தினராக ஏற்றுக் கொண்ட இந்திய மாணவிகளின் வீடுகளிலும் தங்குவர். அந்த திட்டத்தின்கீழ் இந்தியா வந்த 16 வயது மாணவி ஒருவர், தான் தன் வீட்டில் தங்க வைத்த ஒரு இந்திய மாணவியின் வீட்டில் தங்கினார்.

அவர் கல்விச் சுற்றுலா ஒன்றிற்காக புறப்படும்போது அவர் தங்கிய வீட்டின் உரிமையாளரான 55 வயதுடைய அந்த செல்வந்தர் அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

அந்த மாணவி பயணம் புறப்படுவதற்காக தனது உடைகளை பேக் செய்யும்போது அவரது அறைக்குள் வந்த அவர், அந்த இளம்பெண்ணை தவறாக பார்த்ததோடு அவளை திடீரென கட்டியணைத்திருக்கிறார்.

அதோடு அந்த பெண்ணின் மார்பகத்தை தொட முயன்ற அவர், அவளையும் வலுக்கட்டாயமாக தன்னை தவறான முறையில் தொட வைக்க முயன்றிருக்கிறார்.

பயந்துபோன அந்த மாணவி ஒன்றும் சொல்லாமல் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

பின்னர் பேருந்தில் பயணிக்கும்போது தனது ஆசிரியையிடம் நடந்ததைக் கூறி கண்ணீர் விட்டிருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை பிரான்சிலுள்ள அந்த மாணவியின் பெற்றோருக்கும் பிரான்ஸ் தூதரகத்திற்கும் தகவல் கூறிவிட்டு, உடனடியாக பேருந்தை திருப்பச் சொல்லி பொலிஸ் நிலையம் சென்று அந்த வர்த்தகர் மீது புகாரளித்துள்ளார்.

தன் மீது புகார் தெரிவிக்கப்பட்டதும் அந்த வர்த்தகர் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers