அமெரிக்காவில் நடந்த தாக்குதலால் பாரிசில் அணைத்து வைக்கப்பட்ட ஈஃபிள் கோபுரம்

Report Print Kabilan in பிரான்ஸ்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரான்சில் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

பென்சில்வேனியாவில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பெண்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பாரிசில் உள்ள ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவிக்கப்படும் என பாரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்தார்.

அதன்படி, நள்ளிரவு முதல் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers