வீட்டு வாசலில் வைத்து இரும்புக் கம்பியால் நபர் அடித்துக்கொலை! பிரான்சில் சம்பவம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் Villeparisis பகுதியில் நபர் ஒருவர், இரும்புக் கம்பியால் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 27ஆம் திகதி இரவு, Villeparisis பகுதியில் நபர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர், தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்த குறித்த நபரை, திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்தனர்.

பின் தாங்கள் கொண்டு வந்த இரும்புக் கம்பியைக் கொண்டு, அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் குறித்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான நபர் தீயணைப்பு படையினரை அழைத்துள்ளார். ஆனால், சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தபோது குறித்த நபர் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் எதுவும் அறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers