அமெரிக்காவில் நடந்த கொலைவெறித் தாக்குதல் எதிரொலி! பிரெஞ்சு ஆலயங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

அமெரிக்காவின் Pittsburg Synagogue நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் உள்ள யூத வழிபாட்டுத்தலத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரான்சில் உள்ள யூத மற்றும் அனைத்து வழிபாட்டுதலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Christophe Castaner தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘Pittsburg Synagogue தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு என் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என் எண்ணங்கள் அனைத்தும் அவர்கள் தொடர்பாகவே உள்ளது.

காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்