பிரான்ஸில் துப்பாக்கி முனையில் ஆசிரியரை மிரட்டிய மாணவன்! பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவன் ஒருவன் துப்பாக்கி முனையில் ஆசிரியை-ஐ மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிசின் Creteil பகுதியில் உள்ள பள்ளியில், மாணவன் ஒருவன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஆசிரியை-ஐ மிரட்டிய வீடியோ ஒன்று வெளியானது.

அந்த வீடியோவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆசிரியையிடம், மாணவன் ஒருவன் திடீரென துப்பாக்கியை நீட்டி ‘Tu me mets present' என கோஷமிட்டுள்ளான். அதாவது தனக்கு வருகைப் பதிவேட்டில் ‘Present' போடுமாறு அவன் கோரியுள்ளான்.

அந்த மாணவனுடன் இன்னொரு மாணவனும் வகுப்பறையில் இருந்துள்ளான்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக குறித்த ஆசிரியை அளித்த புகாரின் பேரில் பொலிசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...