பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல்: எச்சில் துப்பி அடிஉதை

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸில் வாடகை காரில் பயணித்த ஓரினச்சேர்க்கையாளர்கள் முத்தமிட்டு கொண்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளனர்.

பாரீஸ் 12ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

வாடகை காரில் இரண்டு ஆண்கள் பயணம் செய்த நிலையில் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டனர்.

அதை தொடர்ந்து கார் ஓட்டுனர் காரை நிறுத்தி இருவரையும் கீழே இறக்கினார். பின்னர் இது போன்ற ஆட்களை வண்டியில் ஏற்றுவதில்லை என கூறிய அவர் இருவரையும் தாக்கியுள்ளார்.

மேலும் வீதியில் சென்ற சிலரும் அவர்களை அடித்து உதைத்தனர்.

தாக்குதலின் போது அங்கிருந்த நபர் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது எச்சில் துப்பியுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓரினசேர்க்கையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து பாரீஸில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...