தந்தையின் உடலுடன் 10 ஆண்டுகள் வாழ்ந்த மகன்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் இறந்த தன் தந்தையின் உடலை பதப்படுத்தி அதனுடன் பத்து ஆண்டுகள் ஒருவர் வாழ்ந்து வந்தது அவரது இறப்பிற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பிரான்சிலுள்ள Saint-Quentin பகுதியில் 79 வயதுடைய ஒரு நபர் இறந்து போனார்.

அவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக அவரது உறவினர் ஒருவர் அவர் வீட்டிற்கு சென்றபோது ஒரு படுக்கை விரிப்புக்கு கீழ் ஒரு பதப்படுத்தப்பட்ட உடல் இருப்பதைக் கண்டார்.

அது இறந்த முதியவரின் தந்தையின் உடல். அவர் இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

அதன்பிறகுதான், அந்த முதியவர் இறந்த தனது தந்தையின் உடலுடன் பத்தாண்டுகள் வாழ்ந்தது தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இறந்த இருவருமே முதுமை காரணமாக இயற்கையாகத்தான் மரணமடைந்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்