உக்ரைனில் இறந்த குற்றவாளி பிரான்சில் உல்லாசமாக வாழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்: மீண்டும் கம்பி எண்ணுகிறார்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சர்வதேச மோசடி மற்றும் கருப்புப் பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உக்ரைன் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு நபர் திடீரென தலைமறைவானார்.

பின்னர் Malinovsky என்னும் அந்த நபரின் இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவர் இறந்துவிட்டதாகவே அனைவரும் நம்பிவிட்ட நிலையில் ஜனவரி மாதம் பிரான்ஸ் பொலிஸ் அமைப்பு ஒன்று, Luxembourgஇலுள்ள ஒரு நிறுவனம், மாளிகை ஒன்றை வாங்கியது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விசாரணை ஒன்றை தொடங்கியது.

ஐரோப்பிய சட்ட அமைப்பு ஒன்று, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு உக்ரைன் குடிமகன் என்பதை வெளிப்படுத்த, வழக்கின் தீவிரத்தை உணர்ந்த பிரான்ஸ் பொலிஸ் அமைப்பு, ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோலின் உதவியை நாடியது.

பின்னர் அந்த நபர்தான், இறந்து விட்டதாக சட்டத்தை ஏமாற்றிய உக்ரைன் குடிமகன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் இறந்து விட்டதாக உலகத்தை ஏமாற்றியதோடு, பிரான்சின் Dijon பகுதியில் உல்லாச வாழ்க்கையும் நடத்தி வந்துள்ளார்.

அந்த நபரும் அவரது கூட்டாளிகள் என கருதப்படும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சுமார் 4.6 மில்லியன் யூரோக்கள், ஒரு ஆடம்பர மாளிகை, ஒரு பழங்கால ஆடம்பர கார் மற்றும் சில கலைப்பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்