பிரான்ஸில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் மில்லர் இல்லம் வெற்றி

Report Print Shankar in பிரான்ஸ்
250Shares

சுவாசி லுறுவா பிரெங்கோ தமிழச்சங்கத்தின் கீழ் தமிழ்ச்சோலை நடாத்திய முதலாவது இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியானது நேற்று பொதுச்சுடர்.

ஈகை சுடர் ஏற்றலுடன் பிரான்ஸ் ஓர்லிலா வீல் மைதானத்தில் சுவாசி லுறுவா சங்கத்தின் தலைவர் கைனஸ் அலேசியஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரான்ஸ் நாட்டின் சுவாசி லுறுவா மாநகர பிதா டிடியோ கியோம் மற்றும் தமிழ்ச்சோலை தலைமை பணியகத்தின் தேர்வுப்பொறுப்பாளர் அகிலன் பாடசாலை நிர்வாகி திருமதி மகேஸ்வரன் யசோதா மற்றும் தமிழ்ச்சோலையினதும், தமிழ் சங்கத்தினதும் பிரதிநிதிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டுப்போட்டியில் தாயக விடுதலை போரில் அகிம்சை ரீதியாக போராட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரம் இருந்து உயிர் நீத்த திலீபன் அவர்களினதும், ஆயுத ரீதியாக கரும்புலி தாக்குதலை முதன் முதலாக செய்து வீரகாவியமான மில்லர் அவர்களினதும் நினைவாக இரண்டு இல்லங்கள் முதன்மைப்படுத்தப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டின் தேசியக்கொடியை நகர பிதா ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியினை உப தலைவர் ஏற்றி வைத்ததுடன் விளையாட்டு நிகழ்வுகளை பிரான்ஸ் நாட்டின் மாநகர பிதா ஆரம்பித்து வைத்தார்.

நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டியில் மில்லர் இல்லம் முதலாம் இடத்தினையும் திலீபன் இல்லம் இரண்டாம் இடத்தினையும் பெற்று வெற்றீயீட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்