தெற்கு பிரான்ஸை புரட்டியெடுக்கும் வெள்ளம்! பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Report Print Kabilan in பிரான்ஸ்
168Shares

பிரான்சின் தெற்கு பகுதியான Aude-யில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீட்புக்குழுவினர் மக்களை மீட்க போராடி வருகின்றனர்.

பிரான்சின் Aude மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் வீடுகள், சாலைகள் பல கடுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் படகில் சென்று மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தினால் 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், Pezens பகுதியில் இருந்து சுமார் ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் Aude நகரில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தற்போது 600க்கும் அதிகமான மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

AFP/Getty Images

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்