பிரான்சில் வேட்டையாட தடை: சோகப் பின்னணி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
125Shares

பிரான்ஸ் நகரம் ஒன்றில் மலையேற்றத்திற்காக சைக்கிளில் சென்ற ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் அவர் பரிதாபமாக பலியானார்.

வேட்டையாடுபவர்கள் சுட்ட குண்டு தவறுதலாக அவர் மீது பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக தெரிய வந்ததால் அந்த குறிப்பிட்ட நகரத்திற்கு வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் எல்லையில் சைக்கிளில் மலையேற்றத்திற்கு சென்ற வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த செஃப் ஆன Marc Sutton (34) ஆல்ப்ஸ் மலையில் Montriond பகுதிக்கு அருகில் வேட்டைக்காரர் ஒருவரால் சுடப்பட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் அப்பகுதியில் வேட்டையாடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தக் கோரி முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Marcஇன் மரணத்தை தடுத்திருக்க முடியாதா என அவரது நண்பர்களும் கேள்வி எழுப்ப, Montriond பகுதியின் மேயர் அப்பகுதியில் வேட்டையாட தற்காலிக தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் பதற்றத்துடன் காணப்பட்ட 22 வயது ஒரு நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட, அவர் இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருப்பாரோ என்ற சந்தேகத்தின் பேரில் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

உயிரிழந்த Marc, சமீபத்தில்தான் இப்பகுதியில் தன்னுடைய சொந்த ஹோட்டல் ஒன்றை திறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்