பிரான்சில் அல்லாஹு அக்பர் என கத்திக் கொண்டே தாக்குதல்: உயிருக்கு போராடும் பரிதாபம்

Report Print Santhan in பிரான்ஸ்
409Shares

பிரான்சில் போதையில் இருந்த நபர் திடீரென்று அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டு தாக்குதலில் ஈடுபட்டதால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் லாக்கூர்னேவ் RER நிலையத்தில் அதிக போதையில் இருந்த நபர், திடீரென்று அங்கிருந்த நபரை அல்லா ஹு அக்பர் என கோஷமிட்டு குப்பை தொட்டியை எடுத்து பலமாக அடித்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்த போதும், தாக்குதலாளியின் கைகள் முழுவதும் இரத்தம் இருந்த நிலையில் தொடர்ந்து அல்லா ஹூ அக்பர் என கத்திக்கொண்டே இருந்துள்ளார்.

இதையடுத்து தாக்குதலாளியை கைது செய்த பொலிசார் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த நபர் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என காவல்துறையினர் உறுதியாக கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்