சிரியாவில் இருந்து பிரான்ஸிற்கு திரும்பிய தந்தை-மகனுக்கு சிறை தண்டனை

Report Print Kabilan in பிரான்ஸ்

சிரியாவில் இருந்து பிரான்சிற்கு திரும்பிய தந்தை-மகனுக்கு அந்நாட்டு அரசு சிறை தண்டனை விதித்துள்ளது.

பிரான்சில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைய, கடந்த 2013ஆம் ஆண்டு Lofti(50) என்பவர் தனது இரண்டு மகன்களுடன் சிரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

அதன் பின்னர், 2015ஆம் ஆண்டில் துருக்கி எல்லையில் வைத்து, Loftiயும் அவரது மகன் Karim(23)வும் பிரான்ஸ் திரும்பியபோது கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை குற்றவியல் நீதிமன்றம் தந்தை Lofti-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகன் Karim-க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், தந்தை-மகன் இருவரும் கைது செய்யப்படும் போது பயங்கரவாத சிந்தனையுடன் இருந்ததாகவும், தற்போது தனித்தனியே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள், பிரிவதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நான்கு தடவைகள் முத்தமிட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...