பிரான்சில் 20 இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுவன் கைது! அதிரவைக்கும் பின்னணி

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் இருபது இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை செய்ததாக, 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Picardie நகரில் 13 வயது சிறுவன் ஒருவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டான். குறித்த சிறுவன் இதுவரை 20 இளம்பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், தாக்குதல்கள் என பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர், சிறுவனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறித்த சிறுவன் கடந்த 2014ஆம் ஆண்டில் தனது 9வது வயதில், இளம்பெண் ஒருவரை மிக மோசமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.

மேலும், குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அவன், அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers